தமிழகம்

வரி குறைப்பால் ரூ.37 ஆயிரம் கோடி மிச்சம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிறுவன வரி குறைப்பு நடவடிக்கையால் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முன்னணி 1000 நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.37 ஆயிரம் கோடி வரி மிச்சமாகும் என கிரிசில் ரேட்டிங் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியப் பொருளாதார மந்த நிலையைச் சரிசெய்ய தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறு வனங்களுக்கான வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீத மாகக் குறைத்தார். இந்த நடவடிக் கையால், சந்தையில் பட்டி யலிடப்பட்டுள்ள முன்னணி 1000 நிறுவனங்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி மிச்சமாகும்.

இந்த ஆயிரம் நிறுவனங்கள் 80-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்தவை. இவை ஒட்டுமொத்த பங்குச் சந்தை மதிப்பில் 70 சதவீத பங்கு வகிக்கின்றன.

SCROLL FOR NEXT