சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக நேற்று கனமழை பெய்தது. ஆழ்வார்பேட்டையில் கொட்டும் மழையில் செல்லும் வாகனங்கள் 
தமிழகம்

சென்னை, புறநகரில் மழையால் சாலைகளில் நீர் தேக்கம்: நுங்கம்பாக்கத்தில் 11 மி.மீ. மழை பதிவானது

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை, புறநகரில் நேற்று காலை திடீர் மழை பெய்தது. அதன் காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது.

சென்னையில் கடந்த 19-ம் தேதி அதிகாலை திடீர் கனமழை பெய்தது. அன்று சென்னை நுங்கம் பாக்கத்தில் 10 செமீ மழை பதிவாகி இருந்தது. அதன் காரணமாக மாநக ரம் முழுவதும் பிரதான சாலை களில் 37 இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 18 இடங்களில் மரங் களும், மரக்கிளைகளும் விழுந் தன. அதைத் தொடர்ந்து சில தினங் கள் இடைவெளி விட்ட நிலை யில், நேற்று காலை முதலே சென் னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் வங்கக் கடலில், வடக்கு ஆந்திர மாநில கடலோரப் பகுதியில் நிலவி வரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரண மாக நேற்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீ ரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அதன் காரணமாக சென்னையில் ஜெமினி பாலம் அருகில், வடக்கு உஸ்மான் சாலை, வால்டாக்ஸ் சாலை, சூளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என் பதால் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்ததால், போக்கு வரத்து நெரிசல் பெரிய அளவில் இல்லை.

அனைவருக்கும் விடுமுறை என்பதால், நேற்று பெய்த மழையை பொதுமக்கள் வீட்டிலிருந்தபதி பெரிதும் ரசித்தனர். சென்னையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் 11 மிமீ, மீனம்பாக்கத்தில் 54 மிமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT