தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம்: அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆய்வு

செய்திப்பிரிவு

வண்டலூர்

தீபாவளி பண்டிகையை முன் னிட்டு வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு வசதி யாக தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும் இடத்தை அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.

தீபாவளி, பொங்கல் பண்டிகை யையொட்டி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சென்னை யில் தங்கி வேலை செய்வோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதனால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில்தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும். இந்த ஆணடு, தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் வருகிறது. இதற் காக சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. அந்த இடங்களில் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு வருகிறனர்.

அந்த வகையில், தென்மாவட் டங்களுக்குச் செல்லும் பேருந்து களுக்காக வண்டலூருக்கு அருகில் கிளம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும் இடத்தில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியது:

முக்கிய பண்டிகையை ஒட்டி சென்னையில் தங்கியுள்ள பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர் களுக்கு வசதியாக சென்னையில் கிளாம்பக்கம், தாம்பரம், பூந்த மல்லி உள்ளிட்ட பல்வேறு இடங் களில் தற்காலிக பேருந்து நிறுத்தங் கள் அமைக்கப்படும். இதில் கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் வழியாக பெரும்பாலான பேருந்து கள் செல்லும்.

தற்போது கிளாம்பாக்கம் பகுதி யில் சகல வசதிகளுடன் கூடிய புறநகர் பேருந்து நிலையம் அமைக் கும் பணி ரூ.394 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதனால், அங்கு தற்காலி பேருந்து நிறுத்தம் அமைக்க முடியுமா? என முதல் கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அடுத்தடுத்த ஆய்வு களில் தற்காலிக பேருந்து நிறுத் தம் அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT