பெருநாளான ஈத் பெருநாளை இன்று முஸ்லிம்கள் கோலாகல மாகக் கொண்டாடுகிறார்கள். நோன்பிருந்து அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்ததன் மூலம் அவனிடமிருந்து கருணையைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். சுவனத்தின் பாதையை வலுப்படுத் தியுள்ளார்கள். பசியின் கொடு மையை உணர்ந்து, ஏழை எளியவர் களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய தத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள். நோன்பை முடித்து, உண்டு களித்து மகிழ்ச் சியுடன் இருக்க மார்க்கம் அனு மதித்திருக்கிறது. உடலை, மனதை பாதிக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள் இஸ்லாமுக்கு ஏற்புடையதல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைப்படி, நோன்புப் பெருநாள் தர்மத்தை தொழுகைக்கு முன்னரே கொடுத்துவிட வேண்டும். நோன்புப் பெருநாள் தொழுகை யில் முஸ்லிம்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். நோன்புப் பெருநாளி லும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் இளம்பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும், ஈத் காஹ் மைதானத்திற்கு புறப்படச் செய்ய வேண்டும் என எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டார்கள். ‘‘மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் மட்டுமே தொழும் இடத்தில் இருந்து விலகி, நல்ல காரியங்களில் பங்கெடுக்க வேண் டும். முஸ்லிம்களின் அழைப்புப் பணியிலும் பங்கெடுக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள்’’ என உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பெரு நாளுக்கு ஆடம்பரமாக ஆடை அணிவதையும் நபிகளார் ஆதரிக்க வில்லை. உமர் (ரலி) அவர்கள், நபிகளாரிடம் ஒரு பெருநாளன்று, ஒரு பட்டாடையைக் கொண்டு வந்து தந்தபோது நிச்சயமாக இது பாக்கியமற்றவர்களின் ஆடை யாகும் என்றார்கள். எனவே எளிமை யான, சுத்தமான ஆடைகளை அணிந்தாலே போதும், நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில் எவர் விழித்திருந்து வணக்கம் புரிகிறாரோ, அவருடைய உள்ளம் மறுமை நாளில் விழிப்புடன் இருக்கும். மக்கள் ஈத்பெருநாள் தொழுகைக்கு முன்னரே ஃபித்ரா எனப் படும் தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். ஒரு அடியானின் நோன்பு, ஃபித்ரா தர்மம் செலுத் தாதவரை பூமிக்கும் வானத் திற்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும். ஃபித்ரா (தர்மம்) கொடுத்த பின்புதான் நோன்பு இறைவனை அடையும்.
ஈத் என்றாலே தர்மத்திருநாள் என்பது உறுதியாகிறது. எனவே உடனடியாக தர்மம் செய்து அக்கடமையை நிறைவேற்றி விடவேண்டும். சரி... தர்மத்தைப் பெற்றவர்கள் ‘‘உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கும் துஆச் செய்ய வேண்டும். அதுவே உணவளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும். உதவி என்பது இறைவன் மூலம் கிடைப் பதாகும். ஒருவனுக்கு இறைவன் உபகாரம் செய்து, அதற்கு அவன் நன்றிக் கடனுக்காக அல்ஹம்துலில் லாஹ் (இது இறைவனால் வந்தது) என்று கூறுவானேயானால் அவனுக்கு அல்லாஹ் முதலில் வழங்கியதைவிட அதிகமான உபகாரங்களைக் கொடுத்து விடுகிறான்’’ என்பது நபிமொழி. இதை நினைவில் கொண்டு தர்மத்திருநாளை சிறப்புடன் கொண்டாடத் தயாராவோம்.