சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணி ஒருவரிடம் இருந்து 440 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை வரும் சிங்கப்பூர் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சென்னையைச் சேர்ந்த முகமது அனீஸ் என்பவரிடம் இருந்து 440 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அடாப்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 440 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.