விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலை ஒரு குடும்ப வாரிசுதாரர்கள் சொந்தம் கொண் டாடி வரும் நிலையில், கோயிலில் தங்களுக்கு உரிமை உள்ளது எனக் கோரி ஊர் மக்கள் தொடர்ந்து போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோயில் புனரமைப்பு பணிகளை சொந்தம் கொண்டாடும் குடும்பத்தினர் மேற் கொண்டபோது, தங்களது பங்களிப் பிலும் கோயிலை புனரமைக்க வேண்டும் என மற்றொரு தரப் பினர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்ற அக்குடும்பத்தினர் கோயில் புனரமைப்பு பணிக்கு பங்களிப் பவர்களின் பெயர் கல்வெட்டில் பதியப்படும் எனக் கூறியுள்ளனர். அதன் பின், கோயில் நிர்வாகத்திலும் நாங்களும் இடம்பெறுவோம் என ஊர் மக்கள் கூறியதைத் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டு, அது நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக விருத்தாசலம் சார்-ஆட்சியர் பிரசாந்த் இரு தரப் பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் முன் னேற்றம் ஏற்படாத நிலை உள்ளது. இக்கோயிலை புனரமைப்பது தொடர் பாக இரு தரப்பினர் இடையே பிரச் சினை உள்ளதால், 20-ம் தேதி முதல் கோயில் அரசு கட்டுப்பாட் டில் கொண்டு வருவதாக சார்-ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து நேற்று திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல், டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீஸார், கோயிலுக்கு வெளியே இருந்த அம்மன் சிலையை புனரமைக்கப்படும் கட்டிடத்திற்கு எடுத்துச் சென்று பூஜைகள் செய்து, பின்னர் மீண்டும் அதை இருந்த இடத்திற்கே கொண்டு சென்றனர்.
அப்போது மற்றொரு தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்து தங்கள் முன்னி லையில் மீண்டும் பூஜை செய்ய வேண்டும் என கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் அதே நடைமுறையை வரு வாய் துறையினர் செய்து, பின் னர் மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்தது. அப் போது சில பெண்கள் சாமியாடியும், வேறு சிலர் காவல்துறை வாகனத் தின் மீது ஏறியும் ஆர்ப்பரித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.