தமிழகம்

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு: செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை நடத்துகிறது

செய்திப்பிரிவு

சென்னை

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை நடத்துகிறது. இதற்கான அறிமுக வகுப்பு வரும் 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இது தொடர்பாக செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பி.டீ.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் போட்டித் தேர்வுக்கான சிறப்புப் பள்ளியில் ஐஏஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்புகள் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு ஓராண்டுக்கு ஞாயிறுதோறும் இலவசமாக நடத்த உள்ளது.

இதற்கான அறிமுக வகுப்பு வரும் 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை வேப்பேரி, 2,3 ஈவிகே சம்பத் சாலையில் உள்ள பி.டீ.லி. செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் அமைந்துள்ள போட்டித்தேர்வுக்கான சிறப்புப் பள்ளியில் நடத்தப்படும்.

யூனியன் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகளுக்காக கல்லூரிகளில் பயிலும்போதே மாணவ மாணவிகளுக்கு இத்தேர்வு குறித்து அடிப்படைகளை விளக்கி அவர்களைத் தயார்படுத்தும் ஒரு பயிற்சி வகுப்பு ஆகும்.

கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ மாணவியர்கள் வரும் 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்குள்ளாக நேரில் பதிவு செய்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-26430029 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 8668038347 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். தொலைபேசி மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT