தமிழகம்

தமிழக வக்ஃபு வாரியத்துக்கு நிர்வாக அதிகாரியை நியமனம் செய்தது ஏன்?- உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

மதுரை

தமிழக வக்ஃபு வாரியத்துக்கு நிர் வாக அதிகாரி நியமனம் செய்தது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக் கப்பட்டது.

நெல்லை மாவட்டம் கடைய நல்லூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும் வக்ஃபு வாரிய உறுப் பினருமான கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் 11 உறுப்பினர்கள் இருந்தனர். இதில் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட தேர்வு செய் யப்பட்ட உறுப்பினர்கள் அதிக மாக இருக்க வேண்டும். அதிமுக எம்பியாக இருந்த அன்வர்ராஜா வின் பதவிக் காலம் முடிந்த பிறகு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் கள், நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை சரிசமமாக உள்ளது.

இந்நிலையில் வக்ஃபு வாரிய உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் ராஜினாமா செய்துள்ளார். இதனால் தற்போது வாரியத்தில் 2 உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.

நவாஸ்கனி, முகமதுஜான்

இந்த இடங்களில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, மாநிலங்களவை உறுப்பினர் முகமதுஜான் ஆகி யோரை நியமிக்கலாம். அதற்கு நடவடிக்கை எடுக்காமல் வக்ஃபு வாரிய நிர்வாகக் குழுவைக் கலைத்து, நிர்வாக அதிகாரியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய் துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில் வக்ஃபு வாரிய நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப் பட்டார். இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன் நேற்று விசார ணைக்கு வந்தது. மனுதாரர் தரப் பில் நிர்வாக அதிகாரி நியமனம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு அளித்த உறுதிமொழி மீறப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில், வக்ஃபு வாரி யத்தில் தேர்வு செய்யப்பட்ட உறுப் பினர்களைவிட நியமன உறுப்பி னர்கள் அதிகமாக உள்ளனர். இத னால் கடந்த 6 மாதங்களாக வாரி யம் செயல்படாமல் உள்ளது. இதற்காகவே தற்காலிக ஏற்பா டாக நிர்வாக அதிகாரி நியமிக் கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக் கப்பட்டது.

இதையடுத்து விசாரணையை செப். 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

SCROLL FOR NEXT