அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்காக நம்பியூர் அருகில் உள்ள வரப்பாளையத் தில் 5-வது நீரேற்று நிலையம் கட்டுவதற்கான பணியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். 
தமிழகம்

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க திட்டம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு 

மாநிலம் முழுவதும் செயல்படும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளும் தொடங்கப்பட உள்ள தாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தெரிவித்தார்.

அத்திக்கடவு - அவினாசி திட்டத் துக்கான 5-வது நீரேற்று நிலையம், நம்பியூர் அருகில் உள்ள வரப் பாளையத்தில் அமைக்கப்படு கிறது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் பின்லாந்து நாட்டில் பய ணம் மேற்கொண்டபோது, அங் குள்ள கல்விமுறையை அறிந்தேன். அந்த முறையை நம்முடைய நாட் டில் செயல்படுத்தினால், உயர்கல் விக்குச் செல்லும் 60 சதவீதம் மாணவர்களைத் தவிர, மீதமுள்ள 40 சதவீதம் மாணவர்களுக்கு பிளஸ் 2 முடித்த உடன் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி களில் தற்போது வழங்கப்படும் தமிழ்வழிக் கல்வி வகுப்புகளுடன், விரைவில் ஆங்கிலவழிக் கல்வி வகுப்பும் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு 15 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அடுத்து 8, 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு மலேசியாவைச் சேர்ந்தவர் களைக் கொண்டு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது

அத்திக்கடவு - அவினாசி திட்டத் துக்கு தமிழக அரசு ரூ.1,562 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வரு கின்றன. சட்டப்பேரவை தேர் தலுக்கு முன்னர் இத்திட்டம் செயல் படுத்தப்படும். இதனால் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங் களில் 977 குளங்கள், ஊராட்சி நிர்நிலைகள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றார்.

SCROLL FOR NEXT