வி.சுந்தர்ராஜ்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள பழமையான முத்தம்மாள் சத்திரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என தமிழக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் கிபி.1743 முதல் 1837 வரை பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை அமைத்தனர்.
இவற்றில் தஞ்சாவூரில் காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டையில் சைதாம்பாள்புரம் சத்திரம், ராசகுமரபாயி சத்திரம், ஒரத்தநாட்டில் முத்தம்மாள் சத்திரம், பட்டுக்கோட்டை காசங்குளச் சத்திரம், மணமேல்குடி திரௌபதாம்பாள்புரம் சத்திரம், மீமிசலில் ராசகுமாரம்பாள் சத்திரம், ராமேசுவரத்தில் ராமேசுவரம் சத் திரம். தனுஷ்கோடியில் சேதுக்கரை சத்திரம் என நெடுகிலும் 20 சத் திரங்கள் முக்கியமானவை.
இதில் ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம் முத்தம்மாள் என்பவரின் நினைவாக 1800-ல் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது என இங்குள்ள மராட்டிய கல்வெட்டு குறிப்பிடு கிறது. காசியிலிருந்து ராமே சுவரத்துக்கு யாத்திரை செல்லும் வழியில் ராமேசுவரம் செல்லும் யாத்ரீகர்களுக்கும், வழிப்போக் கர்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்துடன் கூடியதாக இந் தச் சத்திரம் இருந்துள்ளது.
அழகிய தோரண அமைப்புடைய யானை, குதிரை பூட்டிய தேர் சக்கர வாயில் பகுதியும், தூண் கள் தாங்கி நிற்கும் பெரிய முற் றங்களும், ஆங்காங்கே சிவலிங் கமும், மேல்தளத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் மரத்தால் அமைக்கப்பட்ட தூண்களும், நீர் நிறைந்த கிணறும் பழமைமாறா மல் உள்ளன.
ஒருகாலத்தில் சத்திரமாகவும் பின்னர் ஆங்கிலேயர் வரு கைக்குப் பின்னர் பள்ளிக்கூட மாகவும் அதைத் தொடர்ந்து விடுதி மாணவர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. சேதம் அடைந்து தற்போது பாதுகாப்பற்ற நிலையில் உள்ள முத்தம்மாள் சத்திரத்தை பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தமிழக தொல் லியல் துறையின் மண்டல உதவி இயக்குநர் த.தங்கதுரை தலைமை யில் இளநிலை பொறியாளர் தினேஷ், அலுவலர்கள் உமா மகேஸ்வரன், செல்வகணேசன், வரலாற்று ஆய்வாளர் மா.தவசு ஆகியோர் 2 தினங்களுக்கு முன்பு ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரத் தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து மண்டல உதவி இயக்குநர் தங்கதுரை கூறியதாவது:
மாறாத கலைநயத்துடன் உள்ள முத்தம்மாள் சத்திரம் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. இதைப் பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தொல்லியல் துறை இயக்குநர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆகி யோரின் உத்தரவின்படி முத் தம்மாள் சத்திரத்தில் உள்ள கலை நயமிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய என்னென்ன பொருட்கள் உள்ளன, வழிபாட்டு தெய்வச் சிலைகள் உள்ளனவா, கட்டிடத் தின் தற்போதைய நிலை என்ன போன்றவை குறித்து ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.
விரைவில் இது பாதுகாக்கப் பட்ட நினைவுச் சின்னமாக அறி விக்கப்படலாம். அதன்பிறகு இங்கு சீரமைப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு அருங்காட்சி யகம் அமைக்கப்படும். தொடர்ந்து, பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்படும் என்றார்.