உதகை மத்தியப் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திர பயன்பாட்டை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா. படம்:ஆர்.டி.சிவசங்கர். 
தமிழகம்

பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.5 ‘கேஷ்பேக்’- நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

உதகை

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்க கேஷ்பேக் பெறும் புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து உதகை நகராட்சியில் கேஷ்பேக் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்காக 5 இடங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உதகை மத்தியப் பேருந்து நிலையத்தில் கேஷ்பேக் சேவையை தொடங்கி வைத்த ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந் திரத்துக்குள் பிளாஸ்டிக் பாட்டிலை செலுத்தும்போது, அந்த பாட்டில் சின்னஞ்சிறு துகள்களாக்கப் பட்டு அழிக்கப்படும். முதல்கட்ட மாக பேடிஎம் வாடிக்கையாளர்கள் பாட்டிலை இயந்திரத்தினுள் போடும்போது, தங்களது அலை பேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அப்போது அவர்களது கணக்கில் கிரிட் பாயிண்ட்ஸ் கிடைக்கும், தொடர்ந்து ஒரு பாட்டி லுக்கு ரூ.5 வீதம் கேஷ்பேக் கிடைக்கும். அதற்கான தொழில் நுட்ப வசதிகள் அந்த இயந்திரங் களில் செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மாவட்டத்தின் முக்கிய நுழைவு வாயில்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT