வீடுகளில் இயற்கை முறையில் சுத்தப்படுத்துதல் தொடர்பாக கோவை சிறுதுளி அலுவலகத்தில் நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்றோர். 
தமிழகம்

ரசாயன திரவங்கள் இன்றி வீடுகளில் இயற்கை முறையில் சுத்தப்படுத்த பயிற்சி

செய்திப்பிரிவு

கோவை

நீர் நிலைகளை பாதுகாப்பது மட்டு மின்றி, நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுகளையும் செயல்படுத்திவரும் சிறுதுளி அமைப்பு சார்பில், வீடுகளில் ரசாய னம் தவிர்த்து, இயற்கை முறையில் சுத்தப்படுத்துதல் தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது.

சிறுதுளி அலுவலகத்தில் நடை பெற்ற இப்பயிலரங்குக்கு, சிறுதுளி உறுப்பினர் சங்கீதா சுபாஷ் தலைமை வகித்துப் பேசியதாவது:

தொழிற்சாலைக் கழிவுகளால் மட்டும் நமது நீர்நிலைகள் மாசடை வதில்லை. ஒவ்வொரு வீடுக ளில் இருந்து வெளியேறும் கழிவு நீராலும் மாசடைந்து, நீர்நிலைகள் நுரை ததும்ப காட்சியளிக்கின்றன.

தினமும் வீடுகளில் குளிக்க ஷாம்பூ, பாத்திரம் கழுவ, தரை மற்றும் கழிப்பறைகள் சுத்தப் படுத்த என பலவற்றுக்கு செயற் கைத் திரவங்களை, பல நூறு ரூபாய் கொடுத்து வாங்கிப் பயன்படுத்து கிறோம். இவற்றில் சுமார் 52 ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் அனைத்தும் வீடுக ளில் இருந்து கழிவாக வெளியேறி, நீர்நிலைகளில் கலக்கின்றன. சூழல் மாசுபாடும் ஏற்படுகிறது.

ஆனால், நம் முன்னோர் வீடுக ளிலேயே இருந்த இயற்கைப் பொருட்களான சாம்பல், எலுமிச்சை, சீகக்காய் ஆகிய வற்றை பயன்படுத்தினர். இதனால் மக்களுக்கும், சூழலுக்கும் தீங்கு ஏற்படவில்லை. மேலும், வீட்டில் பயன்படுத்திய தண்ணீரை, மரங்கள், செடிகளுக்குச் செல்லு மாறு வடிவமைத்திருந்தனர். இதனால் நிலத்தடி நீரும் உயர்ந்தது.

நமது வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வீட்டு சுத்திகரிப்புகளை தயாரித்துப் பயன்படுத்த முடியும். ஹேண்ட்வாஷுக்குப் பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு சாத்துக்குடி பழத்தோல்களை காயவைத்து, பொடி செய்து, திரவம் தயாரிக்க முடியும். இந்த திரவம் வீட்டைச் சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, கைகழுவவும் பயன்படும். கடலை மாவு, பயத்தம்பருப்பு மூலம் துணி துவைக்கும் திரவங்களை தயாரிக்க முடியும். நுரை வந்தால்தான் பிடிக்கும் என்றால், பூச்சிக்கொட்டையில் உள்ள கொட்டையை அரைத்து சேர்த்தால், நுரை ததும்ப துணிகளையும், வீடுகளையும் சுத்தப்படுத்த முடியும். இயற்கை வழியில் வாழ்ந்தால் இந்த தலைமுறையினர் மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறையினருக்கும், இயற்கை வளங்களை பாதிப்பில்லாமல் கொடுக்க முடியும்.

சிறுதுளி அமைப்பின் அலுவலகம் மற்றும் கோவையில் உள்ள பல பள்ளிகளில், இயற்கையான முறையிலேயே சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, சாம்பல் வைத்து பாத்திரம் கழுவும் பொடி, சலவைத் திரவம், பல வகைகளில் பயன்படுத்த உதவும் பயோ என்சைம் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் முறைகள் கற்றுத் தரப்பட்டன. இதில், ஏராளமானோர் பங்கேற்று, தயாரிப்பு முறைகளைக் கற்றுக் கொண்டதுடன், இனி இயற்கைப் பொருட்களைக் கொண்டே வீடுகளைச் சுத்தப்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

SCROLL FOR NEXT