விருதுநகர்
விருதுநகர் அரசு தலைமை மருத்து வமனையில் நோயாளிகள் பெயர், விவரம் பதிவு செய்ய போதிய பணியாளர் இன்றி, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் ராமமூர்த்தி சாலை யில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு பிரசவ வார்டு, வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தங்களது பெயரைப் பதிவு செய்வர். சில ஆண்டுகளுக்கு முன்பு நோயாளியின் பெயர் தனி பதிவேட்டிலும், தனியாக ஒரு துண்டுச் சீட்டிலும் எழுதி தரும் நடைமுறை இருந்தது. பின்னர், சீட்டு வழங்க கணினி வசதி ஏற்படுத்தப்பட்டது. அதில், நோயாளியின் பெயர், வயது, முகவரி ஆகியவை கணினியில் பதிவு செய்யப்பட்டன.
மருத்துவர்கள் அந்த எண்ணை வைத்து நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர். அந்த விவரமும் கணினியில் பதிவேற்றப்படும். மேலும் ஒருமுறை சீட்டு பதிந்தால் ஓராண்டுக்கு சிகிச்சை பெறலாம்.
ஆனால், மருத்துவமனையின் முன் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டியபோது இணைய தள இணைப்பு வயர்கள் துண்டிக் கப்பட்டு, கணினி செயல்பாடு தடை பட்டது. அதனால், மீண்டும் பெயர் பதிவுக்கு பதிவேடு பயன் படுத்தப்பட்டு கையால் சீட்டு எழுதிக் கொடுக்கப்பட்டது.
தற்போது பழுது சரிசெய்யப்பட்டு கணினி மூலம் பெயர் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், ஒரே ஒரு பணியாளர் மட்டுமே இருப்பதால் நோயாளிகள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து பெயர் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அரசு தலைமை மருத்துவமனையில் பெயர் பதிவுக்கு கூடுதல் பணியா ளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.