தமிழகம்

போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 56 இடங்களில் அதிநவீன ‘ரேடார் கேமராக்கள்’ விரைவில் பொருத்த அரசு நடவடிக்கை 

செய்திப்பிரிவு

சென்னை

போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க, தமிழகத்தில் முதல்கட்டமாக சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 56 இடங்களில் அதிநவீன ரேடார் கேமராக்கள் விரைவில் பொருத்தப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை சரா சரியாக 10 முதல் 12 சதவீதம் அதிகரித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் மொத்த வாகனங் களின் எண்ணிக்கை 2.56 கோடியை தாண்டியுள்ளது. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலை விபத்துகளும் அதிகமாக நடக்கின்றன.

தீவிர கண்காணிப்பு

சாலை விபத்துகளை குறைக் கும் வகையில் போக்குவரத்து துறை மூலம் பல்வேறு நடவடிக் கைகளை தமிழக அரசு மேற் கொண்டு வருகிறது. நெடுஞ் சாலைகளில் சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக் கும் வகையில் அதிநவீன கேம ராக்களை பொருத்தி கண்காணிக்க வுள்ளது.

முதல்கட்டமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலை யில் ரூ.22 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா பொருத் தப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தது. தற்போது அதற்கான டெண்டரை வெளியிட் டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சுமார் 280 கிமீ தூரம் கொண்ட செங்கல்பட்டு - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 56 இடங்களில் அதிநவீன ‘ரேடார் கேமராக்கள்’ பொருத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

சீட் பெல்ட் அணியாமல்...

இந்த கேமராக்கள் அனைத் தையும் இணைக்கும் வகையில் சென்னையில் கட்டுபாட்டு அறை கள் அமைக்கப்படும். இதன் மூலமாக நெடுஞ்சாலையில் அதிவேகம், அனுமதி இல்லாத இடத்தில் வாகனங்களை நிறுத் துதல், சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல், நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் எடை, சரக்கு வாக னங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், சாலைவரி மற்றும் இதர கட்டணங்கள் செலுத்தாதது உள்ளிட்ட குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

240 கிமீ வேகத்தில் வாகனங் கள் சென்றால்கூட துல்லியமாக கண்டுபிடித்து படம் பிடிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. 24 மணிநேரமும் இந்த கேமராக்கள் செயல்படும்.

இரவில் படம் பிடிப்பதற்கு சிறப்பு தொழில்நுட்ப வசதி பயன் படுத்தப்படுகிறது.

அதிக விபத்து நடந்த இடங்களில் இந்த கேமராக்கள் அமைய வாய்ப் புகள் உள்ளன. திருடிய அல்லது தடை செய்யப்பட்ட, தேடப்படும் தீவிரவாதிகள் வாகனங்களில் சென் றாலும், அந்த பதிவு எண்களை கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் சாஃப்ட் வேரில் வசதி உள்ளது.

அபராதம், சிறை தண்டனை

சாலை விதிகளை மீறி செல்வோரை கேமராக்கள் மூலம் கண்டறிந்து அவர்களின் முகவரிக்கு அபராதத் தொகை ரசீது அனுப்பப்படும். குற்றங்களை பொறுத்து அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்க நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்படும்.’’ என்றனர்.

SCROLL FOR NEXT