அதிமுக பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சுபயின் பெற்றோரை நெமிலிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறி, ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார்.படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

சுபஸ்ரீ குடும்பத்துக்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி: மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

குரோம்பேட்டை

சுபஸ்ரீ குடும்பத்துக்கு திமுக அறக் கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் நிதி யுதவி அளிக்கப்பட்டது. சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னையில் பேனர் விழுந்த தால் ஏற்பட்ட விபத்தில் குரோம் பேட்டையை சேர்ந்த மென்பொறி யாளர் சுபஸ்ரீ அண்மையில் உயிரி ழந்தார். இந்நிலையில் நேற்று சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். சுபஸ்ரீயின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் திமுக அறக்கட்டளை சார் பில் சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோ லையை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “கடந்த வாரம் ஆளும்கட்சியினர் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் அடைந்திருக்கிறார். ஏற்கெனவே கோவையில் ரகு என்பவரை பேனர் பலி கொண்டது. இப்போது சுபஸ்ரீ உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. நான் அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினேன். திமுகவினர் யார் பேனர் வைத்தாலும் அவர்கள் மீது கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக் கும்.

தற்போதைய சம்பவத்தில், அரசு நினைத்தால், அடுத்த விநா டியே குற்றவாளியை கைது செய்ய லாம். எனினும் ஒரு நாடகத்தை அவர்கள் நடத்திக் கொண்டிருக் கிறார்கள்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சுபஸ்ரீயின் பொற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், “தமிழகத் தில் விளம்பரத் தட்டிகள் சரிந்து விழுந்து இதுவரை 34 பேர் உயிரி ழந்துள்ளனர். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் சட்ட வரம்புகளை, உயர் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் விளம்பர தட்டிகளை ஆயிரக்கணக்கில் வைத்து தினம் தினம் பொதுமக்களுக்கு இடை யூறு செய்கின்றனர். அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்ப தில்லை. அதன் விளைவாகத்தான் சுபஸ்ரீ இறந்துள்ளார். சுபஸ்ரீ வழக்கில் காவல்துறை அக்கறையோடு செயல்படவில்லை. இந்த வழக் கில் தொடர்புடையவர்களை உட னடியாக கைது செய்ய வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT