தமிழகம்

100 நாள் வேலைத்திட்டம் பணி வழங்காததைக் கண்டித்து விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணி 2 மாதங் களாக வழங்காததை கண்டித்து, நேற்று விவசாய தொழிலாளர்கள் பூண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் மெய்யூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜா பாளையம், மெய்யூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 750 பேருக்கு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியான 100 நாள் வேலைக்கான அடை யாள அட்டைகள் வழங் கப்பட்டுள்ளன. இவற்றில் நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கடந்த 2 மாதங்களாக யாருக்கும் பணி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அவர்கள் ஏற்கெனவே செய்த பல நாட்களுக்கான பணிகளுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் டில்லி, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட் டோர் ஈடுபட்டனர்.

பின்னர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் வழக்கம்போல பணியும் தாமதமின்றி ஊதியமும் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT