தமிழகம்

திமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்: அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு

செய்திப்பிரிவு

விருதுநகர்

அண்ணா 111-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:

அண்ணாவைப் பற்றி பேச அதிமுகவினருக்கு மட்டுமே தகுதி உள்ளது. அண்ணாவை விட்டு விலகிச் சென்றது தான் திமுக. அதிமுகவை அழிக்க 46 ஆண்டு காலம் கருணாநிதி முயற்சித்தார். அவரால் முடியவில்லை. இன்று ஸ்டாலின் புறப்பட்டு விட்டார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. வேலூரில் திமுக வெற்றி பெற்றது தோல்விக்கு சமமானது. ஆனால் எங்கள் தோல்வியோ வெற்றிக்கு சம மானது. இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக அதி கமாக வெற்றி பெறும். அதி முகவில் உள்ள 20 எம்எல் ஏக்களை விலைக்கு வாங்குவோம் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், திமுகவில் உள்ள 60 எம்எல்ஏ-க்களை நாங்கள் விலை க்கு வாங்குவோம். அடுத்த சட்டப் பேர வைத் தேர்தலிலும் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ராஜவர்மன் எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT