ஒய். ஆண்டனி செல்வராஜ்
மதுரை
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் வெறும் 165 பிசியோதெரபிஸ்ட்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். பணியாளர் பற் றாக்குறையால் அறுவை சிகிச்சை களுக்குப் பிறகு நோயாளிகளை இயல்பு நிலைக்கு திரும்ப வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முக்கியமான அறுவை சிகிச் சைகளுக்குப் பிறகு, நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்ப பிசியோதெரபிஸ்ட்களின் சிகிச்சை முக்கியமானது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, பிற அரசு மருத்துவ மனை களில் பிசியோதெரபி சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின் றன.
எலும்பு முறிவு, நரம்பு பாதிப்பு மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமில்லாது, தோள்பட்டை வலி, முதுகு வலி, கை, கால் உள் ளிட்ட 65 வகை வலிகளுக்கு நிவா ரண சிகிச்சைகளை பிசியோ தெரபிஸ்ட்கள் வழங்குகின்றனர். முதியோர் தங்களது தனிப்பட்ட தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதற்கு உதவும் வகையிலான சிகிச்சைகளையும், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சுகப் பிரசவம் நடப்பதற்கான பிரத்யேக சிகிச்சைகளையும் வழங்குகின்றனர்.
10 ஆயிரம் மக்களுக்கு ஒரு பிசியோதெரபிஸ்ட் இருக்க வேண் டும் என்று உலக சுகாதார நிறுவ னம் கூறுகிறது. ஆனால், 30 ஆயிரம் மக்களுக்கு ஓர் இடத்தில் செயல் படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பிசியொதெரபிஸ்ட் இல்லை. அனைத்து தாலுகா அரசு மருத் துவமனைகளிலும் பிசியோதெர பிஸ்ட் பணியிடங்கள் பெயரள வுக்கே உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ஓரளவு பணியாளர்களுடன் பெயரளவுக்கு இத்துறை செயல்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மொத்தம் 165 பிசியோதெரபிஸ்ட்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். குறிப்பாக மதுரை அரசு மருத்துவமனையில் 6 பிசியோ தெரபிஸ்ட்கள் மட்டும் உள்ளனர். இவர்களால் புற நோயாளிகளுக் கும், உள் நோயாளிகளுக்கும் முழுமையான சிகிச்சை வழங்க முடியவில்லை. அதனால், நோயா ளிகள் சிகிச்சைக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பிசியோதெர பிஸ்ட்கள் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் கிரேடு-1, கிரேடு-2 மற்றும் தலைமை பிசியோ தெரபிஸ்ட் பணியிடங்கள் உள்ளன. இதில், சென்னை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் மட்டும் தலைமை பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் நோயாளி கள் வருகைக்கு தகுந்தாற்போல் பணியிடங்கள் உருவாக்கப்படா ததால் பிசியோதெரபிஸ்ட்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதிலும் மிகவும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 அரசு கல்லூரி கள் உட்பட 35 தனியார் பிசியோ தெரபிஸ்ட் கல்லூரிகள் உள்ளன. 6 நிகர்நிலைப் பல்கலைக்கழ கங்களிலும் பிசியோதெரபிஸ்ட் படிப்புகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 2,500 பேர் பிசியோதெர பிஸ்ட் படித்து வெளியேறுகின்றனர்.
தற்போதுவரை 25 ஆயிரம் இளைஞர்கள் படித்து முடித்து அரசு மருத்துவமனைகளில் பணிக் காக காத்திருக்கின்றனர். ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் தேவைப்படும். பிசியோதெரபிஸ்ட்கள் பற்றாக் குறையால் எல்லா நோயாளிகளுக் கும் சிறப்புக் கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க இயலவில்லை. இந்த சிகிச்சையை பொறுத்த வரையில் ஆலோசனையை பெற்று விட்டு வீட்டுக்குச் செல்லக்கூடியது இல்லை. நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்றனர்.