கடலூர்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த தொழிலதிபர் இல்ல திரு மணம் தொடர்பாக தீட்சிதர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் விதிமுறைகளை மீறி கடந்த 11-ம் தேதி நடந்த தொழிலதிபர் இல்ல திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்களது கண்ட னத்தை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது பாஜக மாநில இளைஞரணி பொருளாளர் கோபிநாத் கடந்த 14-ம் தேதி சிதம்பரம் நகர காவல் நிலை யத்தில் ஆய்வாளர் முருகேசனிடம் ஒரு புகார் அளித்தார். அதில், ஆயிரங்கால் மண்டபத்தில் திரு மணம் நடத்த அனுமதி அளித்த தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் நேற்று தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே சஸ் பெண்ட் நடவடிக்கைக்கு ஆளான பட்டு தீட்சிதர் விசாரணையில் பங்கேற்றார். அவருடன் மேலும் 6 தீட்சிதர்கள் பங்கேற்றனர். புகார் அளித்த பாஜக நிர்வாகி கோபி நாத்தும் உடன் இருந்தார்.
அப்போது தீட்சிதர்கள் சார்பில், திருமணம் நடந்தது தவறுதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்த விளக்கத்தை பட்டு தீட்சிதர் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார். அதுபோல் புகார் அளித்த கோபிநாத்தும் தனது கருத்தை எழுத்துப்பூர்வமாக எழுதி டிஎஸ்பியிடம் அளித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில் வருகிற 23-ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கோயிலில் திருமணம் நடத்த அனுமதி பெற்றவர்கள், திருமணத்துக்காக அலங் காரம் செய்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.