ரெ.ஜாய்சன்
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த இரட்டை கொலை குறித்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று முன்தினம் அதிகாலை லாரி ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து இதுவரை 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டரை மாதங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சிவந்தாகுளம் த.முருகேசன் (40), இவரது நண்பர் பிரையண்ட் நகர் பி.விவேக் (40) ஆகியோர் கடந்த 15-ம் தேதி கொலை செய்யப்பட்டனர். இச்சம்ப வம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கு வதற்குள், தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே மேலகூட்டு டன்காடு கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சொரிமுத்து (36), 16-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி இரண்டரை மாதங்களில் 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜூலை மாதத்தில் 11 கொலைகள், ஆகஸ்ட் மாதத்தில் 4, செப்டம்பரில் இதுவரை 4 கொலை கள் நடந்துள்ளன.
கடந்த 4.7.2019-ல் குளத்தூரில் காதல் திருமணம் செய்து கொண்ட சோலைராஜா (24) - ஜோதி (21) தம்பதி இரட்டைக் கொலை, 22.7.2019-ல் புதுக்கோட்டை திரவிய புரம் அருகே திமுக பிரமுகர் வி.எஸ்.கருணாகரன் (64), 21.8.2019-ல் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே வழக்கறிஞரின் சகோதரரான சிவக்குமார் (40), 27.08.2019-ல் தூத்துக் குடி கேவிகே நகரில் பிரபல ரவுடி சிந்தா சரவணன் (35), 12.09.2019-ல் வல்லநாடு அருகே இசக்கிபாண்டி யன் (27) என்ற இளைஞர் மற்றும் 15.9.2019-ல் முருகேசன், விவேக் ஆகியோர் உட்பட 19 பேர் கொலை செய்யப்பட்டனர். இவற்றில் பெரும் பாலான கொலைகள் சொந்தப் பிரச்சினை மற்றும் முன்விரோதத்தில் நடந்தவை.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொலை சம்பவங் களால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதுதொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் நேற்று கூறியதாவது:
எஸ்.பி. விளக்கம்
ஜூலை மாதத்தில் நடந்த 11 கொலை வழக்குகளில் 29 பேர் கைது செய்யப்பட்டனர். ஆகஸ்ட் மாதத்தில் நடந்த 4 கொலைகள் தொடர்பாக, 17 பேர் கைது செய்யப் பட்டனர். 5 பேர் சரணடைந்தனர். கடந்த 15-ம் தேதி நிகழ்ந்த முருகேசன், விவேக் ஆகியோர் கொலை வழக்கில் 8 பேரும், புதுக்கோட்டையில் நிகழ்ந்த சொரி முத்து கொலையில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 வழக்குகளில் 19 குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 வழக்குகளில் இரு வருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 2 வழக்குகளில் இரு வருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்களைத் தடுக்க பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை, காவல்துறையின் 100 என்ற அவசர அழைப்புக்கு தெரிவிக்க வேண்டும். 100-க்கு வரும் அழைப்புகளுக்கு காவல் துறை சார்பில் 14 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.