நெல்லை
சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி இன்று (செப்.17) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி, வி.கே.புதூர் 4 ஆகிய தாலுகாகளைக் கொண்டு சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடைகள், காய்கறிச் சந்தை, 5 ஆயிரம் விசைத்தறிக் கூடங்கள் இன்று மூடப்பட்டுள்ளன.
வர்த்தக சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகைக் கடை மற்றும்அனைத்து வியாபாரிகள் சங்கம் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதனையொட்டி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
அண்மையில்தான் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்திலிருக்கும் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாகப் பிரிக்கக் கோரி மக்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.