தமிழகம்

ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் பல ரகசியம் உள்ளது அமமுக கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தி தகவல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்

சொத்துக் குவிப்பு வழக்கில் பல ரகசியம் இருக்கிறது என்று அமமுக கர்நாடக மாநில பொறுப் பாளரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான புகழேந்தி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக ஒரே நாடு, ஒரே மொழி, அது இந்தி மொழி என்கிற குரலை எழுப்பியுள்ளது. இந்தியாவில் எந் தக் காலத்திலும் ஒரே மொழித் திட் டத்தைக் கொண்டுவர முடியாது.

ஜெயலலிதா, உயிரோடு இருந்த போது சசிகலாவின் ஒப்புதலைப் பெற்று என்னை செய்தித் தொடர் பாளராக நியமித்தார். எனவே, என்னை செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து விடுவிப்பதோ, எடுப்பதோ யார் கையிலும் இல்லை. தினகரன் கையிலும் இல்லை.

எந்த காலத்திலும் எதையும், யாரையும் நம்பி நான் இல்லை. கொள்கையை நம்பித்தான் இருக் கிறேன். எதையும் சந்திக்கவும் தயாராக இருக்கிறேன். தினகரன் என்னை இப்போது அழைத்தாலும் சென்று, என் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கத் தயார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 15 ஆண்டுகளாக ஜெயலலிதா, சசிகலாவுக்காக வழக்கு ஆவணங் களை தூக்கிக்கொண்டு அலைந் துள்ளேன். சொத்துக் குவிப்பு வழக்கில் பல ரகசியம் இருக்கிறது.

சசிகலாவை எப்போது சிறை யிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்பது எனக்குத் தெரி யும். மிக விரைவில் சசிகலா சிறை யிலிருந்து வெளியே வருவார். அப்படி அவர் வந்தால், தற் போதைய ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. அமைச்சர் ஜெயக் குமாரை தவிர மற்ற யாரும் சசிகலா வைப் பற்றி குறை சொல்லவில்லை. எனவே மாற்றம் வரும் என்றார்.

SCROLL FOR NEXT