தமிழகம்

தமிழகம், புதுவையில் இரு நாட்களுக்கு கனமழை பெய்யும்

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வட தமிழக பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் மழை பெய்து வந்தது. தற்போது அந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்துவிட்டது. இருப்பினும், தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட் டங்களில் அநேக இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

திங்கள்கிழமை காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூரில் 8 செமீ, மழையும் குறைந்தபட்சமாக மதுரை மேட்டுப்பட்டி, திருச்சி மருங்காபுரி யில் தலா 5 செமீ மழையும் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT