யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணி யில் பேசுகிறார் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன். 
தமிழகம்

இலங்கை தமிழர்களின் உரிமைக்காக யாழ்ப்பாணத்தில் ‘எழுக தமிழ்’ பேரணி

செய்திப்பிரிவு

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்

இலங்கை தமிழ் மக்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி யாழ்ப் பாணத்தில் நடைபெற்ற 'எழுக தமிழ்' பேரணியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்களர் குடியேற்றத்தை நிறுத்த வேண்டும், போர்க் குற்ற வாளிகளை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும், அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந் தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், காணாமல் ஆக்கப்பட்ட வர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழர்களின் நிலப்பரப்பில் ராணுவ மயமாக்கலை நிறுத்த வேண்டும், போரினால் இடம்பெயர்ந்தவர் களை சொந்த இடங்களில் மீண்டும் குடியேற்ற வேண்டும் ஆகிய ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கையில் உள்ள சமூக அமைப் புகள், தொழிற்சங்கங்கள், தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை சார்பாக 3 ஆண்டுகளாக 'எழுக தமிழ்' என் கிற பெயரில் பெருந்திரள் பேரணி கள் நடத்தப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூரில் இப்பேரணி நேற்று நடை பெற்றது. இப்பேரணி முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பேசியதாவது:

தமிழ் இளைஞர்கள் தங்கள் விடுதலைக்காகப் போராடினார் கள். அரசின் பயங்கரவாதத்துக்கு எதிராக ஈடுகொடுக்க ஆயுதம் ஏந்தினார்கள். இவர்கள் ஆயுதம் ஏந்தக் காரணமாக இருந்தவர்களே சிங்களப் பெரும்பான்மை அரசுகள் தான். இவர்களை பயங்கரவாதி களுடன் முடிச்சுப் போடாதீர்கள். இங்கு தமிழ்ப் பயங்கரவாதிகள் என்று எவரும் கிடையாது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை ஒரு சிறப்புப் பிரதி நிதியை நியமிக்க வேண்டும். மேலும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கும் வகையிலும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனது அலு வலகங்களைத் திறக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் கருத்தை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு ஒன்றை சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT