பிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக மீனவர் அணி சார்பில் இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி சென்னை விவேகானந்தர் இல்லம் அருகே நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வாகன ஓட்டிகள் 69 பேருக்கு இலவசமாக ஹெல்மெட்களை வழங்கினார். உடன், மீனவர் அணித் தலைவர் எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள்.படம்: ம.பிரபு 
தமிழகம்

தமிழக பாஜக தலைவர் விரைவில் அறிவிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல் 

செய்திப்பிரிவு

சென்னை

தமிழக பாஜக தலைவர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்து விரைவில் அறிவிக்கும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக மீனவர் அணி சார்பில் 69 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே நேற்று நடைபெற்றது.

மீனவர் அணித் தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாகன ஓட்டிகள் 69 பேருக்கு இலவசமாக ஹெல்மெட்களை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை சேவையுடனும், பொதுநல நோக்கத்துடனும் பாஜக வினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஓர் அங்கமாக இலவசமாக ஹெல்மெட் வழங்கப்படுகிறது. நாட்டில் சாலை விபத்துகளில் சிக்கி லட்சக்கணக்கானோர் உயிரி ழக்கின்றனர். இந்த விபத்துகள் தடுக்கப்பட வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது அவசியம். தமிழக பாஜக தலைவர் யார் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்து விரைவில் அறிவிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT