தமிழகம்

நானும் ரவுடிதான்... நானும் ரவுடிதான்... என விளம்பரம் தேடும் திமுக: அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்

செய்திப்பிரிவு

மதுரை

'நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்' என்று திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சி போல திமுக செயல்படுகிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "தமிழகம் முழுவதும் அரசு குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், திமுகவினர் சிறிய ஏரி... ஏரி கூடக் கிடையாது.. சிறிய குளங்களை எடுத்துக் கொள்கின்றனர். நாலு ஜேசிபி இயந்திரங்களை எடுத்து வந்து தூர்வாருவதாகக் காட்டுகின்றனர். இதற்கு உதயநிதி ஸ்டாலினைக் கொண்டுவந்து நிற்க வைத்து புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.

இது எப்படி இருக்கிறது? இதைத்தான் நான் சொன்னேன்... வடிவேலு காமெடி போல என்று. அரசாங்கத்தில் அனைத்து அலுவலர்களும் வேலை பார்க்கின்றனர். தமிழகத்தில் உள்ள அத்தனை ஊருணிகளும் பொதுப்பணித் துறையின் மூலமாக தூர் வாரப்படுகின்றன. தடுப்பணைகளும் கட்டப்படுகின்றன.

நான்தான் செய்கிறேன். நான்தான், பார்த்துக்கொள்ளுங்கள், நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்று திமுக செயல்படுகிறது. ஊர், உலகத்தில் எது எதிலேதான் விளம்பரம் தேடுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. எதைப் பார்த்தாலும் திமுகவினர் விளம்பரம் செய்கின்றனர்" என்றார் அமைச்சர் செல்லூர் ராஜு.

SCROLL FOR NEXT