பெரம்பலூர்
அரியலுார் மாவட்டம் இலுப்பை யூரைச் சேர்ந்த ஆனந்த்(37), பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(34) இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று இரவு நல்லறிக்கையில் உள்ள டாஸ்மாக் கடையில் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில், ஆனந்த் கத்தியால் குத்தியதில் சண்முகம் உயிரிழந்தார். இதையறிந்த சண்முகத்தின் அண்ணன் முருகானந்தம்(38), மதுக்கடைக்கு சென்று அங்கிருந்த ஆனந்தை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தார்.இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து, குன்னம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முருகானந்தம், உட்பட 4 பேரை கைது செய்தனர்.