சென்னை
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்ட குமரி அனந்தனுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரிஅனந்தன், மதுவிலக்கு கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி சென்னை நுங்கம் பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று குமரிஅனந்தன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன், திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி, சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தென்னிந்திய விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டி யன் உட்பட அரசியல் கட்சி தலை வர்கள், பல்வேறு அமைப்புகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் நேரில் வந்து குமரி அனந்தனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
உண்ணாவிரதத்தின்போது குமரிஅனந்தன் பேசும்போது, “தமிழகத்தில் பூரண மதுவிலக்கு நிச்சயம் அமல்படுத்தப்பட வேண் டும். அதுவரை எனது போராட்டம் ஓயாது. அண்ணாவின் பெயரில் வாழ்ந்து வரும் ஆளும் அதிமுக அரசு, நிச்சயம் மதுவிலக்கு குறித்து ஒரு நல்ல முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.