தாம்பரம்
சென்னையில் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியான இளம்பெண் சுபயின் பெற்றோருக்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு நேரில் ஆறுதல் கூறினார்.
பேனர் விழுந்த விபத்தில் பலியான இளம் பெண் சுபஸ்ரீயின் வீடு குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரி பவானி நகரில் உள்ளது. நேற்று காலை திமுக முதன்மைச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு, சுபஸ்ரீ வீட்டுக்குச் சென்று அவரது தந்தை ரவி, தாய் கீதா ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறிதாவது:
பேனர் வைக்கக் கூடாது என எங்கள் கட்சி தலைவர் தொண்டர்களுக்கு கண்டிப் பாக உத்தரவிட்டுள்ளார். பேனர் வைப் பதை தடுக்க புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். சட்டப்பேரவை கூடும்போது எங்கள் கட்சி தலைவர் நிச்சயமாக இந்த பிரச்சினையை எழுப்புவார்.
இறந்த சுபஸ்ரீயின் பெற்றோர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் தலைவர், அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுமாறு சொன்னார். அதன் படி அவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னேன். இந்த விவகாரத்தில் தொடர்பு டையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுபஸ்ரீ பெற்றோருக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண் டும். இதற்காக வருகிற, 20-ம் தேதி ஆட்சியரை சந்தித்துப் பேசவுள்ளேன்.
இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.