மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து, 16 கண் மதகு மூடப்பட்டது. இதனால், மதகின் வழியாக நீர் வெளியேறும் பகுதி நீரின்றி காணப்படுகிறது. 
தமிழகம்

நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் 16 கண் மதகு மூடப்பட்டது

செய்திப்பிரிவு

சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையின் 16 கண் மதகு மூடப்பட்டது. அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கர்நாடக மாநில அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்கப் பட்டதால், அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 6-ம் தேதி அணை நீர்மட்டம் 118.11 அடி யாக உயர்ந்தது. அன்று நீர்வரத்து விநாடிக்கு 73 ஆயிரம் கனஅடி யாக இருந்த நிலையில், அன்று இரவு அணையில் இருந்து கூடுத லாக நீரை வெளியேற்ற 16 கண் மதகுகள் திறக்கப்பட்டன. கடந்த 7-ம் தேதி அணை முழு கொள்ளள வான 120 அடியை எட்டியது.

தற்போது, மழை குறைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு நீர் வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாகவும், நீர்மட்டம் 120.20 அடியாகவும் இருந்த நிலையில், டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப் பட்டது. நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இதையடுத்து, நீர் திறப்பு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி யாக குறைக்கப்பட்டது.

கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தும், திறப்பும் குறைந்ததை அடுத்து நேற்று காலை 9 மணியளவில் 16 கண் மதகு மூடப்பட்டது. அணை யின் நீர்மட்டம் நேற்று மாலை 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது.

SCROLL FOR NEXT