சென்னை
தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தேமுதிக தொடர்ந்து பாடுபடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேமுதிக 15-ம் ஆண்டில் வெற்றி கரமாக அடியெடுத்து வைக்கிறது. தேமுதிகவுக்கு தனி வரலாறு உண்டு, எந்த கட்சியிடம் இருந் தும் பிரிந்து வராமல் ஆரம்பிக் கப்பட்ட கட்சி இது. தமிழக மக்களுக்காகவும், வளர்ச்சிக்காக வும் தேமுதிக தொடர்ந்து பாடு படும். எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் வந்த போதும் பல சவால்களை சந் தித்து வீறுநடை போடும் தேமுதிக, தமிழகத்தில் யாரும் தவிர்க்க முடியாத கட்சியாக இருக்கிறது.
இலக்கை நிச்சயம் அடைவோம்
தமிழக மக்களிடத்தில் தேமுதிக வேரூன்றி இருக்கிறது. வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதை கருத்தில் கொண்டு, எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம்.
உண்மையான கொள்கைக் காக, லட்சியத்துக்காக என்மேல் கொண்ட பற்றின் காரணமாக நம் இயக்கத்தில் உள்ள லட்சக் கணக்கான நல்ல உள்ளங்களுடன் என் பயணம் என்றும் தொடரும். நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம் என்ற உறுதியோடும், ‘இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே’ என்கிற நமது கொள்கைப்படி பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து தேமுதிக தொடக்க நாளை வெகுசிறப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த கூறியுள்ளார்.