இந்திய கல்வி மேம்பாட்டு சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற உயர்கல்வி தொடர்பான தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அங்கிருந்தபடியே இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின் தென் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார். (இடமிருந்து) இந்திய கல்வி மேம்பாட்டு சங்க மாற்று தலைவர் எச்.சதுர்வேதி, தமிழக உயர் கல்வித்துறை முதன்மைச் செயலர் மங்கத் ராம் சர்மா, ஏஐசிடிஇ தலைவர் அனி்ல் தத்தாத்ரேயா சஹஸ்ரபுத்தே, இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின் தலைவரும், விஐடி பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஜி.விஸ்வநாதன் மற்றும் சங்க துணைத்தலைவர் எஸ்.மலர்விழி உள்ளிட்டோர். படம்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

இந்திய கல்வி நிறுவனங்கள் உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில் உயர் கல்வியில் பல்வேறு புதுமைகளை புகுத்த வேண்டும்: சென்னையில் நடந்த கருத்தரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை

இந்திய கல்வி நிறுவனங்கள் உலக நாடுகளுடன் போட்டிபோட வேண்டும். எனவே உயர் கல்வி யில் பல்வேறு புதுமைகளை புகுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

இந்திய கல்வி மேம்பாட்டு சங்கம் சார்பில் ‘இந்திய உயர்கல்வியில் புதுமைகள் படைத்தல் மற்றும் தடைகளைத் தாண்டுதல் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற் றது. இந்த கருத்தரங்கை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

அப்போது அங்கிருந்தபடியே இந்திய கல்வி மேம்பாட்டு சங்க தென்மண்டல அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசும்போது, ‘‘இந்திய கல்வி அமைப்பு உல கிலேயே மிகப்பெரியது. உயர் கல்வியில் பல்வேறு தடைகளைத் தாண்டி சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். இந்த சவால்களை எதிர்கொள்ள பல்வேறு புதுமை களை புகுத்த வேண்டிய கட்டாயத் தில் உள்ளோம். இந்தியாவில் திறன் மிகு மனித வள ஆற்றல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு கோடி இளை ஞர்கள் தொழில் தேவைக்கான வட்டத்துக்குள் வருகின்றனர். எந்தெந்த தொழிலுக்கு எந்த மாதிரி யான நபர்கள் தேவையோ அதற் கேற்ப அவர்களுக்கு திறன் மேம் பாட்டு பயிற்சியை அறிவுப்பூர்வ மாக அளிக்க வேண்டும். ஆனால் உலகநாடுகளின் புதிய தொழில் நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நமது கல்வி அமைப்பு முறை இல்லை.

இந்திய கல்வி நிறுவனங்களும் உலக நாடுகளுடன் போட்டிபோட வேண்டும். அதற்கு தேவையை அறிந்து நாம் பல்வேறு புதுமைகளை புகுத்த வேண்டும். அதற்கு நம்மிடம் உள்ள இணையதளம் மிகச்சிறந்த உதாரணம். இதுபோன்ற தேசிய கருத்தரங்குகள் மத்திய, மாநில அரசுகளுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்” என்றார்.

இக்கருத்தரங்கில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் தத்தாத்ரேயா சஹஸ்ரபுத்தே, தமிழக உயர் கல்வித் துறை முதன்மைச் செயலா ளர் மங்கத் ராம் சர்மா, இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத் தலைவரும், விஐடி பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஜி.விஸ்வ நாதன், சங்க மாற்றுத் தலைவர் எச்.சதுர்வேதி, சங்க துணைத் தலைவர் எஸ்.மலர்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT