சென்னை
சென்னை அரசு மருத்துவ மனை மருத்துவர் என கூறி இளம் பெண்ணைத் திருமணம் செய்து மோசடி செய்த இளை ஞர் திருமண வரவேற்பு நிகழ்ச் சியின்போது கைது செய்யப் பட்டுள்ளார். அவருடன் மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோயம்புத்தூர் கிணத்துக் கடவு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (32). சென்னை கொளத்தூர் ஜிகேஎம் காலனி புனித அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாயன் பன் (30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரு கிறார்.
அலுவல் தொடர்பாக அடிக் கடி கோயம்புத்தூர் செல்வது வழக்கம். அதன்படி, 8 மாதங் களுக்கு முன்னர் கோயம்புத் தூருக்குச் சென்று அங்குள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது கார்த் திக்குடன் தாயன்பனுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திக், தான் ஒரு டாக்டர் என்றும் சென்னை யில் உள்ள அரசு மருத்துவ மனை ஒன்றில் வேலை செய்வ தாகவும் கூறியுள்ளார். இரு வரும் நண்பர்களாகினர்.
இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கார்த் திக் சென்னைக்கு வந்து தாயன் பனுக்கு போன் செய்து தனக்கு தங்குவதற்கு ஒரு வீடு வேண் டும் என கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சென்னை வில்லிவாக்கம் வெங்கடேஸ் வரா நகரில் சாஸ்திரி தெரு வில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். அந்த வீட்டில் தங்கிய கார்த்திக், சொகுசு கார் ஒன்றை வாங்கி அதில் தினந்தோறும் மருத்துவ மனைக்குச் செல்வதும் பின்னர் மாலை வீடு திரும்புவதும் என தாயன்பனை நம்ப வைத்துள் ளார். தாயன்பன் வீட்டுக்கு சென்று அவருடைய பெற்றோரி டமும் கார்த்திக் பழகி உள்ளார். அப்போது கோயம்புத்தூரில் தான் ஒரு கோடீஸ்வரன் என்றும் தனக்கு தாய் தந்தை இல்லை நான் ஒரு அனாதை என கூறியதில் தாயன்பன் பெற் றோர்கள் அவரிடம் பாசமாக பழகி உள்ளனர்.
இந்நிலையில் தாயன்பன் வசிக்கும் அதேபகுதியில் சென்னை அரசு பொது மருத் துவமனையில் செவிலியராக உள்ள பெண் ஒருவர் தனது பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். கார்த்திக் அரசு மருத்துவர் என நம்பி வரதட்சணையாக ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. திட்ட மிட்டபடி கடந்த புதன்கிழமை சென்னை கொளத்தூர் குமரன் நகரில் உள்ள ஒரு கோயி லில் அந்தப் பெண்ணுடன், கார்த்திக்கின் திருமணம் நடை பெற்றுள்ளது.
இதையடுத்து திருமண வர வேற்பு நிகழ்ச்சிக்காக அழைப் பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு அந்தப் பெண்ணின் உறவினர் களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி நேற்று முன்தினம் இரவு புழல் ரெட்டேரி அருகே உள்ள ஒரு மண்டபத்தில் இவர் களின் திருமண வரவேற்பு தடபுடலாக நடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச் சியின்போது கார்த்திக் தனது மாமியாரிடம், “உடனடியாக ஒரு லட்சம் பணம் வேண்டும்” என கேட்டுள்ளார். அப்போது அவருடைய நடவடிக்கை களில் சந்தேகம் ஏற்பட்டு, “சமீபத்தில்தானே பத்து லட்சம் கொடுத்தேன். அதற்குள் என்ன அவசரம். வரவேற்பு நிகழ்ச்சி முடியட்டும்” என கூறியதுடன் மருமகன் குறித்து விசாரித்துள் ளார். அப்போது, கார்த்திக் அரசு மருத்துவர் இல்லை என தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து பெண் ணின் உறவினர்கள் கார்த் திக்கை அடித்து உதைத்து மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவருடன் மேலும் 3 பேரும் கைது செய் யப்பட்டனர். கார்த்திக் இதே போல் வேறு யாரையாவது ஏமாற்றி உள்ளாரா எனவும் விசாரணை நடந்து வருகிறது.