தமிழகம்

டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்: மின் அலுவலகங்களில் அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை

மின்கட்டணத்தை மின்வாரிய அலுவலகங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 2 கோடிக்கும் மேற்பட்ட வீடு களுக்கான மின்இணைப்புகளும், 20 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 30 லட்சம் வர்த் தக மின்இணைப்புகளும் உள்ளன. இதற்கான கட்டணத்தை நுகர் வோர் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணமாக செலுத்தி வருகின்றனர். கணிசமானோர் ஆன்லைனில் நெட் பேங்கிங் மூலமாகவும், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டை பயன் படுத்தியும் செலுத்துகிறார்கள்.

மின்வாரிய அலுவலகங்களில் பணமாக வசூலிக்கப்படும் தொகை மின்வாரியத்தின் கணக்கில் குறித்த நேரத்தில் சேர்வதில்லை. இதனால், மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும்போது, அதற்குரிய கட்டணத்தை குறித்த நேரத்தில் செலுத்த முடியாத நிலை மின்வாரியத்துக்கு ஏற்படுகிறது.

இதையடுத்து, ரூ.10 ஆயிரத் துக்கு மேற்பட்ட மின்கட்டணத்தை காசோலை (செக்) மற்றும் வரை வோலை (டிமாண்ட் டிராப்ட்) மூலம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இதிலும் சிக்கல் ஏற் பட்டது. பலர் கடைசி நாளில் காசோலை மூலம் மின்கட்டணம் செலுத்துகின்றனர். அவர்களிடமிருந்து காசோலை பெற்று அதை மாற்றி பணமாக வரவு வைக்கும் முன் அவர் களுக்கு அபராதம் விதிக்கும் சூழல் ஏற்படுகிறது. அத்துடன், கிராமப்புறங்களில் தொழில் புரிபவர்கள் மின்கட்டணத்தை காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த சிரமப்படுகின்றனர்.

மேலும், மின்கட்டணத்தை ரொக்கமாக பெறும்போது சில் லறை கொடுப்பதிலும் பிரச்சினை ஏற்படுகிறது. தற்போது, வங்கி கள் மேற்கொண்டு வரும் மின் னணுப் பணப் பரிமாற்ற நட வடிக்கை காரணமாக, பெரும் பாலானவர்கள் டெபிட், கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர்.

எனவே, இந்த கார்டுகளைப் பயன்படுத்தி ‘பாயிண்ட் ஆப் சேல்ஸ்’ (பாஸ்) எனப்படும் கைய டக்க கருவி மூலம் மின்கட்ட ணத்தை வசூலிக்க மின்வாரியம் முடிவுசெய்துள்ளது. விரைவில் அனைத்து மின்வாரிய அலுவல கங்களிலும் இக்கருவி மூலம் பணம் வசூலிக்கப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித் தனர்.

SCROLL FOR NEXT