நாகர்கோவில்
நாகர்கோவிலில் திருவனந்தபுரம் சாலையில் அமைச்சர் எம்.சி.சம் பத்தை வரவேற்று நேற்று பேனர் கள் வைக்கப்பட்டிருந்தன. பொது மக்கள் எதிர்ப்பால் அவை அகற் றப்பட்டன.
உரிய அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என குமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், நாகர்கோவில் அருகே சுங்காங்கடையில் நேற்று நடைபெற்ற தொழில் முனைவோர் கருத்தரங்கில், அமைச்சர் எம்.சி.சம் பத் பங்கேற்றார். அவரை வரவேற்று நாகர்கோவிலில், திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக சார்பில் பேனர்களும், அலங்கார வளைவும் அமைக்கப்பட்டிருந்தன.
இதற்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த னர். எஸ்பி நாத்திடமும், சுங்காங் கடை பகுதிக்கு உட்பட்ட ஆளூர் பேரூராட்சி நிர்வாகத்திடமும் மக்கள் புகார் தெரிவித்தனர். பேனர் களை அகற்றுமாறு, மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் இருந்து, பேரூ ராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவு வந்தது. பின்னர், போலீஸ் பாதுகாப் புடன் பேனர்கள் அகற்றப்பட்டன.
ஆனால், நிகழ்ச்சி நடந்த இடத் தின் அருகே வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவை அதிகாரிகள் அகற்றவில்லை. `பேனர்களை அகற் றத்தான் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அலங்கார வளைவு குறித்து எதுவும் கூறவில்லை’ என அதிமுகவினர் தெரிவித்தனர்.