ராமேசுவரம்
தனுஷ்கோடி புயலால் அழிந்த கட்டிடங்களின் உச்சியில் ஏறி ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், தனுஷ்கோடிக்கு அதிகமான சுற்றுலாப் பய ணிகளை ஈர்க்கும் விதமாக, புயலின்போது சேதம் அடை ந்து இன்று வரை உள்ள தேவாலயம், கோயில், மருத்துவமனை, பள்ளிக் கட்டிடம், ரயில்வே கேபின் உள்ளிட்ட கட்டிடங்களை, அதன் பழமை மாறாமல் பராமரித்து பாதுகாத்திடும் வகையில் தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை மற்றும் அனைத்துத் துறை அலுவலர் களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் மூலம் மொத்தம் ரூ. 3 கோடி மதிப்பில், திட்ட வரைவு தயாரித்து அதை செயல்படுத்த அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தனுஷ்கோடியில் பழமையான கட்டிடங்களின் உச்சியில் ஏறி, ஆபத்தை உண ராமல் சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்களை எடுப்பது அதிகரித்துள்ளது. இது குறித்து ராமேசுவரத்தைச் சேர்ந்த முகவை முனிஸ் கூறியதாவது: தனுஷ் கோடிக்கு வரும் இளை ஞர்கள், ஆள், அரவமற்ற இடங்களில் உள்ள பழமையான கட்டிடங்களின் உச்சிக்குச் சென்று புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். இந்த பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுற்றுலாப் பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இந்த கட்டிடங் களைச் சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பை அதி கரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.