அரியலூர்
தமிழகத்தில் நடந்த இருவேறு விபத்துகளில் 3 சகோதரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாஸ்தி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் கள் ஆனந்தகுமார்(30), நாகேந்தி ரன்(28), அனில்குமார்(26). இவர் கள் மூவரும் அதே ஊரைச் சேர்ந்த தங்களின் நண்பர்கள் காந்த்(27), நந்தகுமார்(24), ரவிக் குமார்(30), பண்ணபள்ளியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்(26) ஆகியோரு டன் ஒரு காரில் பெங்களூருவில் இருந்து காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு நேற்று முன்தினம் சென்றனர். மீன்சுருட்டியை அடுத்த தழுதாழைமேடு பகுதியில் சென்ற போது, எதிரே வந்த டிப்பர் லாரி யுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆனந்தகுமார், நாகேந் திரன், அனில்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். படுகாயமடைந்த மற்ற 4 பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக மீன்சுருட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
தம்பதி மரணம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி யைச் அடுத்த அம்மாகுளம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்ப வர் குடும்பத்தினருடன், தன் மகள் சியாமளாவுக்கு மாப்பிள்ளை பார்க்க காரில் சென்று கொண்டி ருந்தார். நேற்று அதிகாலை கள்ளக்குறிச்சி அருகே திடீரென காரின் டயர் வெடித்து, அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஏழுமலை (56), அவரது மனைவி ஜெயக்கொடி(48), உறவி னர்கள் சித்ரா (40), பாலாஜி (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.