சென்னை
முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பேரவைத்தலைவர் பி.தனபாலும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
முதலீடுகளை ஈர்க்கவும், பல் வேறு துறைகளின் கீழ் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து அதை தமிழகத்தில் செயல்படுத்த வும் முதல்வர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் வெளிநாடு பயணம் மேற்கொண்டனர்.
முதல்வரைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும், அமைச் சர் நிலோபர் கபீல் ரஷ்யாவுக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரீஷி யஸ் நாட்டுக்கும் சென்று வந்தனர். தற்போது, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகள் சிலவற்றுக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எந்தெந்த நாடுகளுக்கு எப்போது செல்லப்போகிறார் என்பது இன்னும் உறுதிசெய்யப் படவில்லை. இருப்பினும், அவரது வெளிநாடு பயணம் உறுதியாகி யிருப்பதாக அரசுத்துறை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை தவிர, பேரவைத் தலைவர் பி.தனபால் உகாண்டா நாட்டுக்கு செல்ல உள்ளார். காமன் வெல்த் நாடுகளின் பேரவைத் தலைவர்கள் மாநாடு ஆண்டு தோறும் ஒவ்வொரு நாட்டில் நடத் தப் படுகிறது. இந்த ஆண்டு வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை உகாண்டாவில் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக பேரவைத் தலைவர் பி.தனபாலுக்கு அரசு அனுமதியளித்த நிலையில், அவர் வரும் 24-ம் தேதி அங்கு செல் கிறார். செப்.29-ல் நாடு திரும்புவார் என சட்டப்பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.