புதுக்கோட்டை
அரியலூர் மாணவி அனிதா தொடர் பான தற்கொலை வழக்கு விசார ணைக்கு விலக்கு கோரி ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தில் அவரது பெற்றோர் மனு அளித்துள்ளனர் என ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலு வலகத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணையை ஆணையம் நடத்தி வருகிறது. இந்த விசாரணையை விலக்கிக்கொள்ள வேண்டும் என ஆணையத்திடம் அவரது பெற் றோர் மனு அளித்துள்ளனர். ஏன் இவ்வாறு மனு கொடுத்துள்ளனர் என்பது குறித்து தெரியவில்லை. இதுகுறித்து ஆணையம் பரி சீலித்து வருகிறது.
இந்தியாவில் மற்ற மாநிலங் களை விட தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் பதிவாகும் வழக்குகள் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் முறையாக வழங்கப்படுகிறது.
எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் பதி வாகும் வழக்குகளுக்கு 16 நாட் களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் காயம்பட்டி யில் ஒரே குடிநீர் தொட்டியில் ஆதி திராவிடர்களுக்கு தனியாக குழாய் அமைக்கப்பட்டது தொடர்பாக பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.