தமிழகம்

நடிகர் செந்திலுக்கு அமமுகவில் புதிய பதவி

செய்திப்பிரிவு

சென்னை 

அமமுக அமைப்புச் செயலாளர் களாக டாக்டர் கே.கதிர்காமு, நடிகர் செந்தில் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:

அமமுக அமைப்புச் செயலா ளர்களாக திருவாரூர்- சிவா ராஜ மாணிக்கம், தேனி-டாக்டர் கே.கதிர்காமு, பேராவூரணி- எஸ்.கே.தேவதாஸ், தூத்துக்குடி- இரா.ஹென்றி தாமஸ், சென்னை - நடிகர் செந்தில், தேர்தல் பிரிவு செயலாளராக கடம்பூர் எஸ்வி எஸ்பி. மாணிக்கராஜா, தூத்துக் குடி வடக்கு மாவட்ட செயலா ளராக முன்னாள் எம்எல்ஏ ஆர்.சுந்தர்ராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக டாக்டர் எம்.புவனேஸ்வரன், மருத்துவ ரணி செயலாளராக டாக்டர் எஸ்.முத்தையா, இணைச் செய லாளராக டாக்டர் பி.செந்தில் குமார் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT