சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஆய்வு செய்ய இரு நபர் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத் துள்ளது. இக்குழு ஆய்வை முடித்து ஆகஸ்டு 24-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது.
இதையடுத்து இக்குழு இன்று முதல் ஆய்வை மேற்கொள்ள வுள்ளது. இது தொடர்பாக சென்னை அருகேயுள்ள பூந்தமல்லியை சேர்ந்த மனோன்மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், “சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், இந்த நூல கம் திறக்கும்போது இருந்தது போலவே அனைத்து வசதிகளுடன் செயல்படவும், சமீபத்தில் வெளி யான புத்தகங்கள், இதழ்கள் அனைத் தும் இடம்பெறச் செய்யவும் உத்தர விட வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலை மையில் குழு அமைக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடுகையில், அவ்வப்போது வெளியாகும் புத்தகங்கள், இதழ்கள் இல்லாததாலும், அடிப்படை வசதி கள் இல்லாததாலும் அண்ணா நூற் றாண்டு நினைவு நூலகத்துக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது” என்றார்.
அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி வாதிடுகையில், இந்த நூலகம் எப்போதும் போலவே சரிவர பராமரிக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் பராமரிப்புக்காக ரூ.39 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில், மின் கட்டணத்துக்காக மட்டும் ரூ.9 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. எனவே, ஆய்வு செய்ய குழு அமைக் கத் தேவையில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு:
அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், உலகத் தரத்துக்கு இணை யான மிகச் சிறந்த நூலகம் என்பதில் சந்தேகமில்லை. இந்த நூலகம் சரிவர பராமரிக்கப்படவில்லையா அல்லது முன்பு இருந்தது போலவே இருக்கிறதா என்பது பற்றி கருத்து கூற நாங்கள் விரும்பவில்லை. இந்த நூலகம் குறித்து பாரபட்ச மற்ற ஆய்வு நடத்தப்பட வேண்டும். இந்த நூலகம் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங் களைப் பார்த்தோம். அப்போதிருந் தது போல இப்போதும் நூலகம் இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறோம். எனவே, நூலகத் தின் தற்போதைய நிலையைக் கண் டறிய வழக்கறிஞர்கள் பி.டி.ஆஷா, எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட இரு நபர் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு இன்றுமுதல் (செவ் வாய்க்கிழமை) ஆய்வைத் தொடங் கும். அப்போது மனுதாரர், எதிர்மனு தாரர்கள், இந்த வழக்கில் தன்னை யும் சேர்த்துக்கொள்ள மனு செய் துள்ள வழக்கறிஞர் நீலகண்டன் ஆகி யோர் உடனிருக்கலாம். அட்வகேட் ஜெனரல் தமது சார்பில் யாரையா வது நியமித்துக் கொள்ளலாம். இந்த குழு ஆய்வை முடித்து ஆகஸ்டு 24-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.