சென்னை
மதுவை ஒழிக்க வலியுறுத்தி சென்னையில் வரும் 15-ம் தேதி உண்ணாவிரதப் போராட் டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காந்தி பேரவைத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுவை ஒழிக்க வலியுறுத்தி காந்தி பேரவை, தக்கர் பாபா நிலை யம், அகில இந்திய மது விலக்கு சபை சார்பில் சென்னையில் வரும் 15-ம் தேதி உண்ணாவிரதப் போராட் டம் நடக்கிறது. இதில் பங்கேற்று, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன். அப்போது ஒப்புதல் அளித்த தலைவர்களை எண்ணிப் பார்த்தாலே பெருமிதம் மேலோங் குகிறது.
அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. மதுக்கடைகளை மூடி விட்டு, அக்டோபர் 2-ம் தேதி காந்தி யின் 150-வது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் நோக்க மாகும். அதன்படி, மதுவை ஒழித்து, காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடி இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு குமரி அனந்தன் கூறியுள்ளார்.