சென்னை
திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.200 கோடி மதிப்பில் சூரை மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் லட்சக்கணக் கான மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்காக சென்னை காசிமேட்டில் 570 படகு களை கையாளும் வகையில் மீன்பிடி துறைமுகம் கடந்த 1980-ல் ஏற்படுத்தப்பட்டது.
தற்போது காசிமேடு துறைமுகத் தில் தினமும் 2 ஆயிரம் விசைப் படகுகள், சிறிய படகுகள் கையாளப் படுகின்றன. இதனால் கடுமையான இடநெருக்கடி ஏற்படுகிறது.
தவிர, இந்த துறைமுகத்தில் இருந்து அண்மை கடல் மட்டுமின்றி, ஆழ்கடல் மீன்பிடி பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆழ் கடல் மீன்பிடிப்பால் சூரை வகை மீன்கள் அதிக அளவில் கிடைக் கின்றன. இந்த மீனுக்கு ஏற்றுமதி தேவைகளும் அதிகமாக உள்ளன.
எனவே, ஆழ்கடல் மீன்பிடி தொழிலை ஊக்கப்படுத்தவும் சூரை வகை மீன்களை அதிக அளவில் பிடித்து ஏற்றுமதி செய்யவும், காசி மேடு மீன்பிடி துறைமுகத்தின் இடநெருக்கடியை குறைக்கவும் வசதியாக சென்னை திருவொற்றி யூர் குப்பத்தில் ரூ.200 கோடி மதிப் பில் சூரை மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி கடந்த 2018 ஜூன் 6-ம் தேதி 110 விதியின் கீழ் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்ட மைப்பு மேம்பாட்டு நிதி திட்டத் தின் மூலம் சூரை மீன்பிடி துறை முகம் அமைக்க அரசாணை பிறப் பிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்துக் கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று, பணிகளை தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் 849 மீட்டர் நீளம் தெற்கு அலை தடுப்பு சுவர், 550 மீட்டர் நீளம் வடக்கு அலை தடுப்பு சுவர், 550 மீட்டர் நீளம் பெரிய மற்றும் சிறிய படகு அணையும் தளம், 550 மீட்டர் நீளம் தடுப்புச் சுவர், 163 சதுர மீட்டர் மீன்பிடி துறை நிர்வாக கட்டிடம், 258 சதுர மீட்டர் வலை பின்னும் கூடம், 300 சதுர மீட்டர் சிறுமீன்கள் ஏலக்கூடம், 765 சதுர மீட்டர் ஆழ் கடல் மீன் ஏல விற்பனைக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள் ளன. இத்திட்டத்துக்கு முறையாக கடலோர மேலாண்மை ஆணை யத்திடமும் அனுமதி பெறப்பட் டுள்ளது.
இந்த துறைமுகத்தில் சுமார் 500 விசைப் படகுகள், 300 சிறிய வகை படகுகள் நிறுத்தும் வசதியும், மீன்களை பதப்படுத்தும் வசதியும் ஏற்படுத்தப்படும். சுகாதாரமான முறையில் மீன்களை கையாள வசதி இருப்பதால், மீன்களின் தரம் குறையாமல் பாதுகாக்கப்படும். மீன்களுக்கு உரிய விலை கிடைக் கும் என்பதால் மீனவர்களின் பொரு ளாதாரம் உயரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், அம்பத்தூர் எம்எல்ஏ வி.அலெக்சாண்டர், மீன் வளத் துறை இயக்குநர் சமீரன், சென்னை ஆட்சியர் ஆர்.சீதா லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.