கோவை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பூக்கள் விற்பனை எதிர் பார்த்த அளவு அதிகரிக்கவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு கேரளாவில் பெய்த மழை யால் அதிக சேதம் ஏற்பட்டதை யடுத்து, ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பூ விற்பனை பெரிய அளவில் இல்லை. நடப்பாண்டு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், விலையிலும், விற்பனை யிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கோவை பூ மார்க்கெட்டில் கடை வைத்துள்ள கோட்டை ஹக்கீம் கூறியதாவது:
கோவையில் லட்சக்கணக்கான கேரள மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் வீடுகளில் பூக்களால் கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். எனவே, ஓசூர், சத்திய மங்கலம், நிலக்கோட்டை பகுதி களில் இருந்து அதிக அளவிலான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும், வழக்க மான அளவே விற்பனை இருந்தது. விற்பனையிலும், விலையிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. கேரளாவுக்கும் குறைந்த அளவே பூக்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தேனி, மதுரை, நிலக்கோட்டை மார்க்கெட்டுகளில் கோவை மார்க் கெட்டைவிட விலைகுறைவு என்ப தால் வியாபாரிகள் அங்கிருந்து பூக்களை வாங்கிச்சென்றுள்ளனர். கோவை பூ மார்க்கெட்டில் செண்டு மல்லி கிலோ ரூ.50, வாடாமல்லி ரூ.120, அரளி ரூ.150 முதல் ரூ.250, ஜாதி, முல்லை ரூ.600, வெள்ளை செவ்வந்தி ரூ.250, குண்டு மல்லி ரூ.500 முதல் ரூ.1,000 வரையும், சம்பங்கி ரூ.200, தாமரை ஒன்று ரூ.10, இருபது ரோஜாக்கள் அடங்கிய கட்டு ரூ.250 முதல் ரூ.350 வரையும் விற்பனை செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.