சென்னை
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் பணியிட மாற்றத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக் கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கம்லேஷ் தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பணியிட மாற்றத்தை மறுபரி சீலனை செய்யக் கோரி தஹில் ரமானி விடுத்த கோரிக்கையை கொலீஜியம் நிராகரித்தது. இதில் அதிருப்தி அடைந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய் துள்ளார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி தஹில் ரமானியின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (எம்எச்ஏஏ), மெட்ராஸ் பார் அசோசியேஷன், லா அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம்
உயர் நீதிமன்றத்தின் ஆவின் நுழைவுவாயில் பகுதியில் சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமை யில் திரண்ட வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி கோஷம் எழுப்பினர். இந்த நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பிற சங்கங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுடனும் கலந்துபேசி, தலைமை நீதிபதி தஹில் ரமானியின் பணியிட மாற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று மோகனகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதேபோல தமிழகம் முழு வதும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால், நீதிமன்றங் களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான வழக்குகள் தள்ளிவைக்கப் பட்டன.