தமிழகம்

10 ஆண்டுகளில் மிக வெப்பமான ஜூலை மாதம்: வெப்பக் காற்று வீசுவதால் வெயில் அதிகரிப்பு - வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தகவல்

செய்திப்பிரிவு

வெப்பக் காற்று வட மேற்கு திசை யில் வீசுவதால் சென்னையில் வெயில் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 10 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு மிக வெப்பமான ஜூலை மாதமாக இந்த மாதம் உள்ளது. சென்னையில் 1915-ம் ஆண்டு ஜூலை மாதம் பதிவான 41.1 டிகிரிதான் ஜூலை மாதத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பமாகும். 2006-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதிக பட்ச வெப்பமாக 40.1 டிகிரி பதிவாகி யுள்ளது. அதன் பிறகு இந்த வருடம் ஜூலை 5-ம் தேதி 40.1 டிகிரி யும், 6-ம் தேதி 40.5 டிகிரியும், 7-ம் தேதி 40.7 டிகிரியும் பதிவாகியுள்ளது.

சென்னையில் வெயில் அதிகரித் திருப்பதற்கு 3 காரணங்களை சுட்டிக் காட்டுகிறார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன். அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பொதுவாக தென்மேற்கு பருவ மழை காலத்தில் தமிழகத்தின் மேற்கு பகுதிகளில் மழை அதிக மாக இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக அப்பகுதிகளில் மழை குறைவாக பெய்துள்ளது. அதனால் வட மேற்கு திசையி லிருந்து வீசக்கூடிய காற்று வெப்ப மாக உள்ளது. இரண்டாவதாக கடல் காற்று தாமதமாக வீசத் தொடங்குகிறது. பொதுவாக காலை 10.30 மணிக்கு கடல் காற்று வீச தொடங்கினால் நமக்கு வெப்பம் தெரியாது. ஆனால் சில நாட்களில் மதியம் 2.15 மணிக்கு மேல்தான் கடல் காற்று வீசத் தொடங்குகிறது. அதுவும் கொஞ்ச நேரத்தில் நின்றுவிடுகிறது. மூன்றாவதாக, கடந்த 2 நாட்களாக மேகங்கள் இல்லாத தெளிந்த வானம் காணப்படுகிறது. இந்த காரணங்களினால் சென்னையில் வெப்பம் அதிகரித்துள்ளது.

வெயில் சற்று குறையும்

எனினும் வரும் நாட்களில் மேற்கு பகுதிகளில் மழை பெய் யும் என்பதாலும், வானத்தில் மேகங் கள் அதிகரிக்கும் என்பதாலும் வெப்பம் சற்று குறைய வாய்ப்பிருக் கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT