தமிழகம்

சென்னையில் புதிதாக 700 கழிப்பறைகள்: மாநகராட்சி தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் 186 இடங்களில் புதிதாக 700 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் பொது கழிப்பறைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாக பொதுவான ஒரு குற்றச்சாட்டு உள்ளது. சென்னையில் சுமார் 70 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். மேலும் படிப்புக்காகவும், பணிக் காகவும் தினந்தோறும் லட்சக் கணக்கானவர்கள் வருகிறார்கள். இவர்களின் பயன்பாட்டுக்காக சென்னையில் சுமார் 900 பொதுக் கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அதிலும் பல கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளன.

இந்நிலையில் சென்னையில் 348 இடங்களில் புதிதாக கழிப் பறைகள் கட்டப்படும் என்று மாநக ராட்சி அறிவித்திருந்தது. இதில் பெண்களுக்கான பிரத்யேகமான கழிப்பறைகள் உட்பட ஐந்து விதமான கழிப்பறைகள் கட்டப்படுகின்றன.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “ சென்னையில் மொத்தம் 348 இடங்களில் கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன. இதில் 300 இடங்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 186 இடங்களில் 700 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 162 இடங்களில் கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன. மேலும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டப்படுவதற்கு இடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன” என்றார்.

SCROLL FOR NEXT