தமிழகம்

தனியார் கல்லூரி பேருந்து மோதி 13 வயது சிறுமி உயிரிழப்பு: பெற்றோர், உறவினர்கள் மறியல்

செய்திப்பிரிவு

தருமபுரி

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 13 வயது சிறுமி உயிரிழந்தார்.

கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் அருகிலுள்ள வேப்பிலைப்பட்டி கிராமத்தில் மளிகை நடத்தி வருகிறார். இவரது மகள் நித்யா (13). இவர் கேத்துரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வேப்பிலைப்பட்டியில் தந்தை நடத்தி வரும் மளிகைக் கடையில் இருந்து கேத்துரெட்டிப்பட்டியில் உள்ள வீட்டுக்கு சைக்கிளில் சென் றார். அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மகன் சபரி (10) என்ற சிறுவனை தன்னுடன் சைக்கிளில் நித்யா அழைத்துச் சென்றுள்ளார்.

கேத்து ரெட்டிப்பட்டி நோக்கி இருவரும் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த தனியார் கல்லூரி பேருந்து நித்யாவின் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில், நித்யா சம்பவ இடத்திலே யே உயிரிழந்தார். சைக்கிளில் உடன் சென்ற சிறுவன் சபரி பலத்த காய மடைந்தார். சிறுவனை அரு கில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிறுவன் சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திய தனியார் கல்லூரி பேருந்தை சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தருமபுரி சார் ஆட்சியர் சிவன் அருள், அரூர் டிஎஸ்பி செல்லபாண்டியன் மற்றும் கடத்தூர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குறுகலான சாலையே விபத்துக்கு காரணம் என்பதால் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனவும் மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்த மறியலால் தாளநத்தம்-பொம்மிடி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. விபத்தை ஏற்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், சாலை விரிவாக்கம் தொடர்பான கோரிக்கை நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பின்னரே மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT