தமிழகம்

புதிய மின் இணைப்பு பெறுவதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்: தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு

செய்திப்பிரிவு

சென்னை

புதிய மின் இணைப்புகள் பெற இனிமேல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, பொதுமக்களி டையே விழிப்புணர்வை ஏற் படுத்த மின்வாரியம் திட்டமிட் டுள்ளது.

வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு புதிதாக மின் இணைப்பு பெற, மின்வாரிய அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். அவ் வாறு விண்ணப்பிக்கும்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத் தைவிட அதிக தொகை கேட்பதாக புகார்கள் எழுகின்றன. கூடுதல் தொகையை கொடுத்தால்தான் உடனடியாக மின் இணைப்பு கிடைப்பதாகவும், கூடுதல் பணம் தராதவர்களுக்கு இணைப்பு தராமல் மின்வாரிய ஊழியர்கள் அலைக்கழிப்பதாகவும் மின்வாரி யத்துக்கு நுகர்வோர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டில் புதிய மின் இணைப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் திட் டத்தை மின்வாரியம் தொடங்கி யது. இதன்மூலம், மின்இணைப்பு கோரி விண்ணப்பிப்பவர்களின் விவரங்கள் அனைத்தும் கணினி யில் பதிவேற்றம் செய்யப்படு வதால், ஏதேனும் காலதாமதம் ஏற்பட்டாலும் அதற்கான கார ணத்தை உடனடியாக கண்டு பிடித்து சரி செய்ய முடிந்தது.

ஆனால், இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், கடந்த 2 ஆண்டுகளில் இது வரை 15 ஆயிரம் பேர் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பித்துள் ளனர். அத்துடன், கிராமப்புறங் களில் மின்வாரிய அலுவலகங் களில் நேரடியாக விண்ணப்பிக் கும் முறையும் தற்போது அமலில் உள்ளது.

இந்நிலையில், மின் இணைப் புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை செயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்களிடையே அதிக அள வில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT