அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் துபாய் நகருக்கு வருகை தந்த முதல்வர் பழனிசாமிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர். 
தமிழகம்

துபாயில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.3,750 கோடி முதலீடு செய்ய திட்டம்: முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

செய்திப்பிரிவு

சென்னை

துபாயில் உள்ள பல்வேறு நிறு வனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. அங்கு நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத் தில் ரூ.3,750 கோடி முதலீட் டுக்கான 6 புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் முதல்வர் பழனிசாமி முன் னிலையில் கையெழுத்தாகின.

தமிழகத்துக்கு அதிக அளவில் அந்நிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வெளிநாடுகளில் செயல் படுத்தப்படும் தொழில்நுட்பங் களை தமிழகத்தில் செயல்படுத் தவும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி 13 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இதற்காக கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அவர் இங்கிலாந்து தலைநகர் லண்ட னுக்கு புறப்பட்டுச் சென்றார்.

லண்டனில் 3 நாட்கள்

லண்டனில் 3 நாட்கள் பயணம் மேற்கொண்ட முதல்வர், அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந் தித்துப் பேசினார். அப்போது சுகா தாரம் உள்ளிட்ட துறைகளில் பல் வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் கையெத்தாகின. அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, ஆகஸ்ட் 31-ம் தேதி அமெரிக்கா சென்றார். நியூயார்க், சான் ஹீசே நகரங்களில் நடந்த முதலீட்டாளர் கள் கூட்டத்தில் 35 நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.5,080 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகின. பின்னர் சான்பிரான் சிஸ்கோ நகருக்குச் சென்ற முதல் வர் பழனிசாமி, அங்குள்ள டெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை, ப்ளூம் எனர்ஜி நிறுவனங்களை பார் வையிட்டு அதன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்க பயணத்தை முடித் துக் கொண்டு கடந்த 7-ம் தேதி இரவு துபாய் சென்றடைந்தார். துபாயில் கடந்த 2 நாட்களாக பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முதலீட்டாளர்கள் பலரை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வரு மாறு அழைப்பு விடுத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் பொருளா தாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் ’பிஸினஸ் லீடர்ஸ் போரம்’ அமைப்பும், இந்திய துணைத் தூதரகமும் இணைந்து நேற்று நடத்திய முதலீட்டாளர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

அப்போது பல்வேறு நிறுவனங் கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்தன. அதன்படி, ரூ.3,750 கோடி முதலீட்டுக்கான 6 புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின. இதன்மூலம் 11 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்நிகழ்ச்சி யில், தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலை மைச் செயலர் கே.சண்முகம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை திரும்பினார்

முதல்வர் பழனிசாமி, நேற்று மாலை துபாயில் இருந்து புறப் பட்டு, இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் முதல்வரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

SCROLL FOR NEXT